நுண்ணங்கிகள்



சாதாரண கண்களால் நேரடியாகக் காண முடியாதவையும், பருமனில் மிகச் சிறியவையுமான அங்கிகள் நுண்ணங்கிகள் எனப்படும்.

உதாரணம்

  • Bacteria
  • Cyano bacteria
  • Virus
  • Fungus
  • தனிக்கல அல்காக்கள் /இழையுருவான அல்காக்கள்
  • Viroids
  • prions 
நுண்ணங்கிகளின் வாழிடங்கள் 

மண், வளி, நீர் போன்ற பரந்த சூழல்
தாவரங்கள், விலங்குகள், மனிதன் உட்பட அவற்றின் உடல் மேற்பரப்பில்
வெந்நீர் ஊற்று, அமிலத் தன்மை, உவர்தன்மை மிக்க வாழிடங்கள்

நுண்ணங்கிகளின் வாழிடப் பல்வகைமைக்கான காரணங்கள்

பருமனில் மிகச் சிறியவையாக இருத்தல்
 போசணைப் பல்லினத்துவம் இருத்தல்
பல்வேறு சூழல் நிலைமைகளை சகித்து வாழும் தன்மை இருத்தல்
 ஒட்சிசன் கிடைக்கும் சூழலிலும், ஒட்சிசன் இல்லாத சூழலிலும் வாழக் கூடிய உடற்றொழிலியல் பல்வகைமை இருத்தல்.
 உயர் இனப்பெருக்க வீதம் இருத்தல்

நுண்ணங்கிகளின் போசணைப் பல்வகைமை 

போசணை வகை சக்தியின் தோற்றுவாய் காபன் தோற்றுவாய் உதாரணம்
இரசாயன தற்போசணை அசேதன இரசாயனப் பதார்த்தங்கள் CO2
NITROBACTER
NITROSOMONAS
THIOBACILLUS 
இரசாயன பிறபோசணை சேதனச் சேர்வைகள் சேதனக் காபன்
பெரும்பாலான BACTERIAகள்
பங்கசு
அநேக
புரோட்டோ சோவாக்கள்
ESCHERICHIA COLI
ஒளிக்குரிய தற்போசணை                 சூரிய ஒளி CO2
ANABAENA
NOSTOC
CHROMATIUM
CHLOROBIUM
ஒளிக்குரிய பிறபோசணை ஒளி

சேதனக் காபன்
RHODOSPIRILLUM

ஒட்சிசன் தொடர்பாக நுண்ணங்கிகளில் காணப்படுகின்ற பல்வகைமை  

காற்று வாழ் நுண்ணங்கிகள்

இவை O2 கிடைக்கும் சூழலில் மட்டும் வாழக் கூடியவை.
உ – ம் : Acetobacter
அமையத்திற்கு ஏற்ற காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள்

இயல்பாக O2 உள்ள போதும், இல்லாத போதும் வாழக்கூடியவை
உ – ம் : Escherichia coli
                         Saccharomyces

கட்டுப்பட்ட காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள்

இவை O2 இல்லாத சூழலில் மட்டும் வாழக் கூடியவை
உ – ம் : Clostridium

நுண் காற்று நாட்டமுள்ள நுண்ணங்கிகள்

இவை வளிமண்டலத்திலும் பார்க்க O2 செறிவு குறைந்த சூழலில் வாழுபவை.
உ – ம் : Lactobacillus



    எமது வீடியோ

    No comments:

    Post a Comment