VARIABLE DECLARATION

VARIABLE DECLARATION என்றால் என்ன?

ஒரு VARIABLE ஐ நமது PROGRAM மில் பயன்படுத்துவதற்கு முன்பாக அதை நாம் DECLARE செய்தாக வேண்டும். எப்படி?

MYNAME : STRING
MYAGE : INTEGER
MYWEIGHT : FLOAT
A/LPASSED : BOOLEAN

இங்கே MYNAME என்பது VARIABLE NAME ஆகும். STRING என்பது DATA TYPE ஆகும். அதாவது MYNAME ல் STRING DATA வை STORE செய்யவேண்டியிருப்பதால் இப்படி DECLARE செய்துள்ளோம். இதைப் போலவே மற்ற VARIABLE களும் DECLARE செய்யப்பட்டுள்ளன.

"I LOVE MY COUNTRY" என்பதை STRING என்று குறிப்பிடுகிறோம்.

மேலே நாம் DECLARE செய்துள்ள VARIABLE களில் VALUE வை போடுவோமா?

MYNAME = "MAFAS"
MYAGE = 22
MYWEIGHT = 55.45
MYWEIGHT = 55.55
STUDENT = TRUE

என்று எழுதினால் COMPUTER கொடுக்கப்பட்ட VALUE க்களை அந்தந்த VARIABLE களில் STORE செய்து வைத்துவிடும்.

அடுத்து VARIABLE லில் உள்ள VALUE வை நமது PROGRAM மில் எத்தனை முறைவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். மேலே MYWEIGHT என்ற VARIABLE லில் இரண்டு முறை VALUE மாற்றப்பட்டிருக்கிறது. கடைசியாக எந்த VALUE வை நாம் பதிந்தோமோ அதுதான் அந்த VARIABLE லில் இருக்கும்.

நமது PROGRAM முடிந்தவுடன் அனைத்து VARIABLE களும் COMPUTER MEMORY யிலிருந்து அழிக்கப்பட்டுவிடும். அதிலிருந்த VALUE க்களும் அழிக்கப்பட்டுவிடும்

இப்பொழுது பைதான் மொழியில் பாப்போம் 

 Numbers(எண்கள்) :
Number என்பது தரவுகளை(data) கையாண்டு numberic value-ஆக store செய்வதே numbers எங்கிறோம்.
 4.1.1 Integer(முழு எண்) :
   Integer என்பது முழு எண்கள் என்கிறோம். மிதவை புள்ளி எண்களை(float) முழு எண்களாக மாற்றுவதற்கு integer ஆனது பயன்படுத்தபடுகிறது.அதேபோன்று input வாங்குவதில் கூட முழு எண் மதிப்பு வாங்குமாறு set செய்யலாம்.கீழே உள்ள படத்தினை பார்த்தால் புரியும்.
உதாரணமாக: 
இங்கு a=50.9 என்பதில் float value ஆனது store செய்யபட்டுள்ளது.அதை முழு எண்ணாக int(a)-ல் value 50 என்று கிடைக்கும்.
அதேபோன்று b என்ற variable-ல் integer மட்டுமே input ஆக வாங்கப்படுகிறது.இதில் ganesan என்று string-னை கொடுக்கும் error message கிடைக்கின்றது.மறுபடியும் b-ல் முழு எண்ணை input ஆக கொடுக்கும் போது தான் அவை b-ல் store ஆகும்.
4.1.2  float (மிதவைப்புள்ளி எண்) :
   float என்பது மிதவைபுள்ளி எண்கள் என்கிறோம்.முழு எண்களை(integer)  மிதவை புள்ளி எண்களாக மாற்றுவதற்கு float ஆனது பயன்படுத்தபடுகிறது.அதேபோன்று input வாங்குவதில் கூட float-னை வாங்குமாறு set செய்யலாம்.கீழே உள்ள படத்தினை பார்த்தால் புரியும்.
உதாரணமாக:
இங்கு a=50 என்பதில் int value ஆனது store செய்யபட்டுள்ளது.அதை மிதவை புள்ளி எண்ணாக float(a)-ல் value 50.0 என்று கிடைக்கும்.
அதேபோன்று b என்ற variable-ல் float மட்டுமே input ஆக வாங்கப்படுகிறது.இதில் python என்று string-னை கொடுக்கும் error message கிடைக்கின்றது.மறுபடியும் b-ல் முழு எண்ணை input ஆக கொடுக்கும் போது தான் அவை b-ல் மிதவை புள்ளி எண்ணாக float store ஆகும்.
4.1.3 Complex (சிக்கலான எண்கள்):
ஒரு சிக்கலான எண், a + bi, a மற்றும் b உண்மையான(real) எண்கள் மற்றும் i என்பது imaginary(கற்பனை) எண்ணாகும். i2 = -1 என்பது imaginary part ஆகும். உதாரணமாக, -3.5 + 2i ஒரு சிக்கலான எண். இதனை python மொழியில் சாதரணமாக செய்யலாம்.
உதாரணமாக:
இங்கு u என்பது real and imaginary சேர்ந்துள்ளது.v-ல் real value மட்டும் உள்ளது.இதனை கூட்டும் போது real value ஆனது add ஆகி imaginary part அப்படியே கிடைக்கிறது.
complex(a,b) இவற்றுள் a என்பது real,b என்பது imaginary.இதனை conjugate செய்யும் போது imaginary value மட்டும் conjugate செய்யப்படும்.
4.2 Multiple  assignment :
பைத்தான் ஒரு ஒற்றை மதிப்பினை(value) ஒரே நேரத்தில் பல மாறிகள்(variable)-ல் store செய்ய அனுமதிக்கிறது. அதேபோன்று மாறிகளில் value மற்றும் word-னை store செய்யலாம்.
உதாரணமாக :
இங்கே, ஒரு முழு எண் மதிப்பு 500 கொண்டு a,b,c என்கிற variable-ல் சேமிக்கப்படுகிறது.மேலும் மூன்று மாறிகள் ஒரே நினைவக இடத்திற்கு ஒதுக்கப்படுகின்றன. நீங்கள் பல மாறிகள் பல பொருட்களை ஒதுக்கவும் முடியும்.
அதேபோல் Multiple  assignment-ல் variable and string-யும் store செய்யமுடியும்.
4.3 string(சரம்) :
சரம் என்பதே மாறாத தன்மை கொண்ட நிலையான அமைப்பினையே string என்கிறோம்.stringனை அடையாளம் காண்பது இரண்டு single quotation-க்கும் இடையிலும் அல்லது double quotation-க்கு இடையில் word மற்றும் value-யே string ஆகும்.
உதாரணமாக :
Double quotation-ஐ மூன்று முறை continue-ஆக ஆரம்பித்து மூன்று முறை continue-ஆக முடிப்பது string ஆகும்.இதில் paragraph அனைத்துமே string ஆக store செய்யலாம்.
அதேபோன்று a=90 என்பது  சரமாகும்.b=10 என்பது integer.ஆகவே integer-யும் string-யும் சேர்க்க முடியாது.ஆகவே integer-ஐ string ஆக மாற்ற str(10) என்று பயன்படுத்தினால் அவை string-ஆக மாறிவிட்டது.
இவற்றை சேர்க்கும் போது 9010 என்று காண்பிக்கப்படுகிறது.இவ்வாறே balaganesan-ம் காண்பிக்கப்படுகிறது.
Escape SequenceDescription
\newlineBackslash and newline ignored
\\Backslash
\’Single quote
\”Double quote
\aASCII Bell
\bASCII Backspace
\fASCII Formfeed
\nASCII Linefeed
\rASCII Carriage Return
\tASCII Horizontal Tab
\vASCII Vertical Tab
\oooCharacter with octal value ooo
\xHHCharacter with hexadecimal value HH

அதேபோல் string-ல் எழுத்துக்களை பெரியதாக,சிறியதாக மற்றும் முதல் எழுத்தை மட்டும் பெரிதாக்க கீழ்க்கண்டவாறு பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக :
a என்ற variable-ல் string என்பது store செய்யப்படுகிறது.இவை அனைத்தும் small case ஆக உள்ளது.இதனை பெரியதாக மாற்றுவதற்கு a.upper() என்றும் சிறியதாக  மாற்றுவதற்கு a.lower() என்றும்,முதல் எழுத்தை மட்டும் பெரியதாக மாற்றுவதற்கு capitalize() என்கிற function-ம் பயன்படுத்தப்படுகிறது.
String format :
% என்பது string-ல்  Format-ஐ குறிப்பதாகும்.
%s என்பது string ஆகவும்,
%d என்பது decimal ஆகவும்  python assign செய்துக்கொள்ளும்.
% என்பது கொடுக்கப்பட்டதில் format-ஐ குறிப்பதற்கு உதவுகிறது.
String-ல் பயன்படும் function :
உதாரணம் 1:
a என்பதில் “ganesan” என்று வாங்கப்படுகிறது.a எங்கிற variable-ல் எத்தனை character-கள் பயன்படுத்தப்பட்டுள்ளன  என்பதை குறிப்பிடுவதற்கு len() ஆனது பயன்படுத்தப் படுகின்றன.len(a) என்று குறிப்பிடும்போது 7 என்று கிடைக்கின்றது.
  •     a.isalnum() என்பது a-ல் alnumeric value உள்ளதா என்பதை குறிக்கின்றன.இதில் ஒரு charcter அதாவது ஒரு letter இருந்தால் கூட True என்று கிடைக்கும்.
  • a.isalpha() என்பது a-ல் alphabetic உள்ளதா என்பதைகுறிக்கின்றன.இதில் ஒரு charcter அதாவது letter இருந்தால் கூட True என்று கிடைக்கும்.
  • a.isdigit() என்பது a-ல் digit(எண்கள்) உள்ளதா என்பதை குறிக்கின்றன. இதில் ஒரு எண்கள் கூட இல்லாததால் False என்று கிடைக்கின்றது.
  • a.islower() என்பது a-ல் உள்ள letter சிறியதா என்று check செய்கின்றது.a-ல் அனைத்தும் சிறியதாக இருப்பதால் True என்று கிடைக்கின்றது.
  • a.isupper() என்பது a-ல் உள்ள letter பெரியதா என்று check செய்கின்றது.a-ல் அனைத்தும் சிறியதாக இருப்பதால் False என்று கிடைக்கின்றது.
  • a.isspace() என்பது a-ல் space(காலியிடம்) உள்ளதா என்று check செய்கின்றது.a-ல் காலியிடம் இல்லாததால் False என்று கிடைக்கின்றது.
  • a.istitle() என்பது a ஆனது title(தலைப்பா) என்று பார்க்கிறது.a ஆனது தலைப்பு இல்லை என்பதால் இங்கு False என்று கிடைக்கிறது.
உதாரணம்2:
இதில் a-ல் “  python  “ என்று store செய்யப்பட்டுள்ளது.இங்கு a-ல் உள்ள python-ன் left side space-ஐ நீக்க lstrip() பயன்படும். இதை a-ல் a.lstrip() என்று பயன்படுத்தும் போது இடது பக்க space ஆனது நீக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.
a-ல் உள்ள python-ன் right side space-ஐ remove செய்வதற்கு rstrip() பயன்படும்.இதை a-ல் a.rstrip() என்று பயன்படுத்தும் போது வலது பக்க space ஆனது நீக்கப்படும்.
a மற்றும் b-யினை சேர்ப்பதற்கு concatenate(+) ஆனது பயன்படும்.இங்கு a மற்றும் b ஆனது சேர்க்கப்பட்டு “pythonprogramming” என்று வெளிப்படுவதைக் காணலாம்.
உதாரணம்3:
முயன்று பாருங்கள்:
str1 என்ற variable-ல் “this is string example …wow!!!”என்றும் str2 என்ற variable-ல் “exam”என்றும் store செய்யப்படுகின்றன.
இதில் str2-வை str1-ல் இருக்கின்றதா என்பதை பார்ப்பதற்கு find என்பது பயன்படுத்தப்படுகிறது.


str1.find(str2) என்பது str1-ல் str2-ஐ find செய்கின்றது.
4.4 list (பட்டியல்):
   list ஆனது square bracket-க்குள் இருந்தால் அதனையே list என்கிறோம்.இவை C-ல் உள்ள Array-களைப் போன்றது. ஒரே list-ல் வெவ்வேறு data types ஆனது இருக்க முடியும்.ஒரு list-ல் store செய்யப்பட்ட மதிப்புகள் slice ஆபரேட்டர் ([ ] மற்றும் [ : ] ஆகியவற்றைப்பயன்படுத்தி அணுகலாம்.
உதாரணம்1
இதில் a என்ற list-ல் எண்களும், b என்ற list-ல் string-களும்,c என்ற list-ல் எண்கள் மற்றும் string-களும் இருக்கின்றன.d ஆனது a,b,c என்ற list-ஐஅனைத்தும் + ஆனது concatenate(ஒன்றுசேர்ப்பதற்கு) உதவுகிறது.d-ல் அனைத்தும் ஒன்று சேர்க்கப் பட்டு இருப்பதை காணலாம்.
மேலேவுள்ள அட்டவணையானது list-ல் store செய்யப்பட்டுள்ள மதிப்பிற்கான இடத்தினைத் தெரிவிக்கின்றது.உதாரணமாக
A=[1,2,3,4,5,6,7,8,9,10]
A எங்கிற list-ல் 1 ஆனது 0 மற்றும் -10 க்கு சமமாகும்.நாம் A எங்கிற list-ல் 1-ஐ காணவேண்டும் என்றால் A[0] அல்லது A[-10] என்றும் குறிப்பிடலாம்.அதேபோல் 5-ஐ காணவேண்டும் என்றால் A[4] அல்லது A[-6] என்றும் கூறலாம்.அதேபோல் 10-ஐ காணவேண்டும் என்றால் A[9] அல்லது A[-1] என்றும் கூறலாம்.
மேலேவுள்ள அட்டவணையானது list-ல் store செய்யப்பட்டுள்ள மதிப்பிற்கான இடத்தினைத் தெரிவிக்கின்றது.
உதாரணமாக
B = [‘p’, ‘r’, ‘o’, ‘g’, ‘r’, ‘a’, ‘m’, ‘m’, ‘i’, ‘n’, ‘g’]
B என்ற list-ல் p ஆனது 0 மற்றும் -11 க்கு சமமாகும்.நாம் B என்ற list-ல் p-ஐ காணவேண்டும் என்றால் A[0] அல்லது A[-11] என்றும் குறிப்பிடலாம்.அதேபோல் a-ஐ காணவேண்டும் என்றால் A[5] அல்லது A[-6] என்றும் கூறலாம்.அதேபோல் n-ஐ காணவேண்டும் என்றால் A[9] அல்லது A[-2] என்றும் குறிப்பிட வேண்டும்.
கீழே a என்ற list ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.இதில் எத்தனை value என்பதை காண்பதற்கு len() என்கிற function ஆனது பயன்படுத்த படுகிறது.
உதாரணம்2:
a-ல் 0 இடத்தில் என்ன மதிப்பு இருக்கிறது என்பதை காட்டுகின்றது.அதேபோல் -1,5 லும் என்ன மதிப்பு இருக்கிறது என்பதை காட்டுகின்றது. இங்கு : என்பது slicing-க்கு பயன்படுகிற operator ஆகும். a[:5] ஆனது list-ல் 5வது இடத்திற்கு முன் உள்ள அனைத்தையும் காட்டுகிறது. அதேபோல் a[5:] ஆனது list-ல் 5 மற்றும் 5வது இடத்திற்கு பின் உள்ள அனைத்தையும் காட்டுகிறது.
a-ல் -1 இடத்தில் இருப்பது a என்ற list-ல் உள்ள கடைசி character ஆகும். a[-1:] ஆனது list-ல் -1 வது இடத்திற்கு பின் உள்ள அனைத்தையும் display செய்கிறது. -1 க்கு பிறகு எதுவும் இல்லாததால் -1 ஆனது display செய்யபடும்.
a[:-1] ஆனது list-ல் -1 வது இடத்திற்கு முன் உள்ள அனைத்தையும் display செய்கிறது.
a[:] என்றானது a-ல் உள்ள அனைத்தையும் display செய்யும்.
a[2:7] ஆனது 2 வது முதல் 7-க்கு முன் உள்ள அனைத்தையும் காட்டும்.
உதாரணம்3:
இங்கு a என்பது tuple ஆகும்.இதனை list ஆக மாற்றுவதற்கு list(a) என்று குறிப்பிடும் போது ganesan என்பது தனிதனியாக மாற்றப்பட்டு இருப்பதை காணலாம்.

உதாரணம்4:
இங்கு a என்பது tuple ஆகும்.இதனை list ஆக மாற்றுவதற்கு list(a) என்று குறிப்பிடும் போது programming என்பது தனிதனியாக மாற்றப்பட்டு list-ல் சேமிக்கப்படுகிறது.
இங்கு l என்கிற object ஆனது list-ல் append(சேர்க்க) படுகிறது.
count ஆனது எந்த object-னை count செய்ய வேண்டும் என்பதை குறிக்கின்றது.
இங்கு g என்கிற objectஆனது list-ல் இருமுறை இருப்பதால் 2 என்று தருகின்றது.
extend என்பது list உடன் மற்றொரு list-ஐ இணைக்க உதவுகிறது.
index என்பது list-ல் object எந்த இடத்தில் இருப்பதை தெரிவிக்கும்.
remove என்பது list-ல் object-னை அழிக்க உதவுகிறது.
reverse என்பது list-ல் உள்ள object அனைத்தையும் தலைகீழாக மாற்ற உதவுகிறது.
4.5 Tuple():
tuple என்பது data type-ன் இன்னொரு படிநிலையாகும்.இது list-ஐ போன்றே செயல்படும் தன்மைக் கொண்டது.tuple ஆனது “(“ மற்றும் “ )“-அதாவது parenthese-குள் இருந்தால் அது tuple ஆகும்.கீழே உள்ள உதாரணமானது tuple-ஐ நன்கு விளக்கும்.
இதில் tuple என்பதில் object காணப்படுகிறது.அதேபோல் tuple2-லும் object  காணப்படுகிறது.இவ்விரண்டு tuple-ம் சேர்ப்பதற்கு (+) பயன்படுகிறது.tuple-ல் உள்ள object-ஐ எடுத்து பார்ப்பதற்கு list-ல் பயன்படுத்தியதுபோல் tuple-ம் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.tuple-ல் உள்ள object-ஐ list ஆக மாற்றுவதற்கு list  function-ஐ பயன்படுத்தலாம்.அதேபோல் {}-க்குள் tuple-ல் உள்ள object கொண்டுவருவதற்கு set function பயன்படுத்தவும்.
அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கீழே உள்ள படமானது நன்கு விளக்கும்.
உதாரணம்2:
இங்கு tuple,tuple2-ல் tuple ஆனது பெறப்படுகிறது.tuple3-ல் tuple மற்றும் tuple2 சேர்க்கப்படுகிறது.பின்பு tuple3 ஆனது dictionary-ஆக மாற்றுவதற்கு set என்ற function பயன்படுத்தபடுகிறது. இவை {}-ள் இருப்பதை காணலாம்.அதேபோல் tuple3 ஆனது list செய்யபடுகிறது.இவை []-ள் objects ஆனது வந்திருப்பதை காணலாம்.
4.6  Dictionary 
Dictionary function என்பது சாதரணமாக பயன்படுத்தப்படும் table-ஐ போன்றதாகும்.இதில் எதாவது ஒன்றான object-ஐ குறிப்பிடும் போது அதற்கு இணையான description தென்படும்.dictonary function ஆனது curly bracket ஆன {}-ள் இருப்பதாகும்.
உதாரணம்1:
Dict என்று dictionary உருவாக்கப்படுகிறது.dict[‘1’] ஆனது dictionary-ல் பயன்படுத்தப்படுகிற keys ஆகும்.”number one” ஆனது dictionary-ல் உள்ள values ஆகும். dict[2] ஆனது dictionary-ல் பயன்படுத்தப்படாததால் traceback error கிடைக்கின்றது.dictonary-ஐ பயன்படுத்தும் போது dictionary-ன் keys-ஐ கொடுத்தே அதற்கு இணையான values-ஐ பெறமுடியும்.employeedict என்கிற பெயரில் dictionary உருவாக்க படுகிறது.
இதில் keys மற்றும் values-ஐ பிரித்து காட்டுவதற்கு ‘:’ பயன்படுத்தபடும். employeedict-ல் உள்ள values அனைத்தையும் காண்பதற்கு employeedict.values() என்றும் keys அனைத்தையும் காண்பதற்கு employeedict.keys()என்றும் குறிப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment