நுண்ணங்கிகளின் பயன்

நுண்ணங்கிகளின் பயன்


 மனிதனுக்கும் ஏனைய உயிரிகளுக்கும் உச்சப் பயன் கிடைக்கும் வகையில் உயிர்த் தொகுதிகளையும், உயிர்த் தொழிட்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்வதும், மேம்படுத்திக் கொள்வதும்  எனப்படும். இது உயிரியலினதும், தொழினுட்பத்தினதும் சேர்க்கையாகும்.
உயிர் தொழினுட்பவியலின் வகைகள்
நுண்ணங்கி உயிர்த் தொழினுட்பவியல்
மூலக்கூற்று உயிர்த் தொழினுட்பவியல்
உயிர்தொழினுட்பவியலின் பண்டைய பயன்பாடு.

தாவர, விலங்குகளை பெருக்கிக் கொள்ளுதல்.
நொதித்தல் மூலம் உணவு,பானங்களின் தயாரிப்பு.
தாவரங்களில் இருந்து மருந்து உற்பத்தி


நுண்ணங்கிகுரிய உயிர்த் தொழினுட்பவியல்

இத்துறையில் நுண்ணங்கிகளின் தொழிற்பாடுகள் மனித தேவைக்கு பயன்படுத்தி பின்வரும் உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மதுசாரம், வினாகிரி உற்பத்தி.
மதுவக் கலத்தினுள் நடைபெறும் வெல்லத்தின் நொதித்தலின் விளைவாகும்.
காற்றின்றிய முறையில் குளுக்கோசு உடைக்கப்படுவதன் மூலம் எதையில் அற்ககோல், சக்தி(ATP) என்பன விடுவிக்கப்படும்.

வெதுப்பக உற்பத்திகள்.
மதுவம் பயன்படுத்தப்படுகிறது.
மதுவத்தின் காற்றின்றிய சுவாசம் மூலம் வெளிவிடப்படும் CO2 சிறைப்பிடிக்கப்படும்.. இதனால் பாண் பஞ்சமைப்பை பெரும்,
இதன் போது பெறப்படும் எதனோல் வெப்பத்தினால் ஆவியாகிவிடும்.
Eg : பாண், அப்பம் உற்பத்தி

பால் உணவுப் பொருட்களின் உற்பத்தி.
பாலை நொதிக்கச் செய்ய Streptococcus thermophilus, Lactobacillus bulgaricus ஆகிய பற்றீரியா இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Eg : பாற்கட்டி,யோகட் தயாரிப்பு

 தாவர நார்களின் பிரித்தெடுப்பு
தாவர நார்கள் நீரில் ஊறவிடப்பட்டு நுண்ணங்கிகள் மூலம் நார்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.
மண்ணில் உள்ள அழுகல் வளரிக்குரிய, காற்றின்றி வாழ் பற்றீரியாக்கள் சுரக்கும் பெக்ரிநேசு நொதியம் பயன்படுத்தப்படுகிறது.
Eg : தென்னை மட்டையில் இருந்து நார் பிரித்தெடுப்பு, சனல் (Sun Hemp) உற்பத்தி, சாக்குச் சனல் தாவரம்.
மேற்குறித்த முறைகள் மனிதானால் ஆரம்ப காலம் தொட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

நவீன பயன்பாடு
விவசாயம்,கைத்தொழில், மருத்துவம், சூழல் மீள்சீரமைக்கும் நடவடிக்கை போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

விவசாயம்
தாவர போசனை -நைதரசன்
தாவரங்களின் நைதரசன் தேவையை பூர்த்தி செய்து வைப்பதற்காக நுண்ணுயிர்த் தொழிநுட்ப முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
REF நன்மை, தீமை..


உயிர்ப் பீடை நாசினிகள்
பொருளாதாரப் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பவை பீடைகளாகும்.
இரசாயனப் பதார்த்தங்களுக்கு பதிலாக நுண்ணங்கிகளைபயன்படுத்தி உயரியல் முறையில் அழித்தல் ஆகும்.
Lepidoptera குடும்பத்தை சேர்ந்த சில வகை பீடைகளை அழிக்க Bacillus thuringiensis எனும் பற்றீரியா பயன்படுகிறது.

களைகளை அழித்தல்
மனித தேவைக்குப் பயன்படாத தாவரங்கள் களைகளாகும்.
இவற்றை அழிக்க நுண்ணங்கிகள் பயன்படுத்தப்படுகிறது.
சல்வீனியா எனும் நீர்க்கலையை அளிக்க Alternaria எனும் பங்கசு பயன்படுகிறது.

கைத்தொழில்

       உயிரியல் உலோகப் பிரித்தெடுப்பு

தரம், செறிவு குறைந்த உலோகத் தாதுக்களில் இருந்து தூய உலோகங்களை பிரித்தெடுக்கப் பயன்ப்படும்
Thiobacillus thiooxidans, Thiobacillus ferooxidents ஆகிய பற்றீரியாக்கள் பயன்படுகின்றன.
Eg -செம்பு, யுரேனியம், வெள்ளி, நிக்கல், நாகம், நிக்கல், தங்கம், ஈயம்.

உயிரியல் துப்பரவாக்கி உற்பத்தி
நுண்ணங்கிகளின் நொதியங்களினால் ஆனவை
துணிகளில் உள்ள உணவுப் பதார்த்தங்கள், குருதிக்கரைகள் போன்ற கரைகளை எளிய கூறுகளாக மாற்றி அழிவடையச் செய்யும்.


மருத்துவத்துறை

நுண்ணுயிர்க் கொல்லி உற்பத்தி
உடலினுள் புகும் நுண்ணங்கிகளை அளிக்க இது பயன்படுகிறது.
இவை நுண்ணங்கிகளில் இருந்தே பிரிதெடுக்கப்படுகின்றன.
Eg – Penicillin – Penicillium பங்கசு
        Streptomycin – Strptomyces griseus பற்றீரியா
        Tetracycline – Streptomyces aureofacienes

சூழல் மேம்பாடு
கழிவகற்றல்


மாசடைந்த சூழலில் உள்ள கழிவுகளை அகற்றவும் குறித்த சூழலை தீங்கற்ற நிலைக்கு மாற்றுவத்தற்காகவும் நுண்ணங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இது உயிரியல் பரிகரணம் எனப்படும்
கப்பல்களில் இருந்து வெளியேறும் எண்ணைக் கழிவுகளை அகற்ற Aeromonas, Bacillus இனங்களும்,
கழிவு நீர் பரிகரனத்தில் Bacillus இனங்களும்
சேதனக் கழிவுகளை கூட்டுரமாக்கலில் Mycobacterium, Actinobacter இனங்களும் பயன்படுத்தப்படுகின்றன

18 comments: