விசை (Force)
விசை (Force) என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.
விசை என்பது பொதுவாக இழுவை அல்லது தள்ளல் எனக் கருதப்பட்டாலும் புவியீர்ப்பு மற்றும் காந்த விசை போன்ற தொடுகையற்ற விசைகளாலும் திணிவு ஆர்முடுகலுக்கோ அமர்முடுகலுக்கோ உட்படும்.(விசை என்பது ஒரு பொருளை இயக்குதல் அல்லது இயக்க முயலுதல்)
பொதுவான குறியீடு: F
SI அலகு: நியூட்டன்
வேறு அலகுகளிலிருந்து பெறப்படும் வாய்ப்பாடு: F = m a
ஒரு பொருளின் மீது விசைகள் ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது நியூட்டனின் இயக்க விதிகள் எனப்படும். முதல் விதி விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கோ அல்லது ஓய்வு நிலைக்கோ உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவும், செயல்படும் திசையும் பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசை மற்றும் எதிர்விசை இவற்றின் தன்மையையும் விளக்குகின்றன.
No comments:
Post a Comment