யாதேனுமொரு நபர் அல்லது நிறுவனத்தின் விசேட தேவை ஒன்று அல்லது பலவற்றை நிறைவேற்றும் நோக்கத்துக்காகவே இணையத்தளங்கள் உருவாக்கப்படுகின்றன. உலகலாவிய வலையிலே பல மில்லியன்
கணக்கான இணையத்தளங்கள் காணப் படுகின்றன. அவற்றின் தேவைப்பாடுகள் பலவற்றை அவதானிக்க முடியும். அவற்றில் சில வருமாறு:
1) தகவல் தொடர்பாடல் (Communication)
இணையப் பயநர்களுக்களின் கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு தகவல் தொடர் பாடலுக்காக உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள் காணப்படுகின்றன.
உதாரணம் : WWW.mafastech.blogspot.com,WWW.Inie.lk,
WWW.edu/pub.gov.lk, WWWWWW.wcbopedia.org
2) வாணிகம் [E - (commerce)
இணையத்திலே பொருள்களையும் சேவைகளையும் வழங்கும் இணையத்தளங்கள் காணப்படுகின்றன. உதாரணம் : WWWWW.fairlin.lk,
WWWww.annazon.com
3)பொழுதுபோக்கு (Entertainment)
பாடல்,
திரைப்படம்,
நாடகம் போன்றவற்றை கண்டுகளித்தல் அல்லது தரவிறக்கம் செய்தல்,
வினோத விளையாட்டுக்களில் ஈடுபடல்,
வானொலி கேட்டல்,
தொலைக்காட்சி பார்த்தல் போன்ற நோக்கத்துக்கான பொழுதுபோக்கு இணையத்தளங்கள் காணப்படுகின்றன.
உதாரணம் : www.islandcricket.lk,
www.ietflix.com,
www.youtube.com
4) விளம்பரம் (Advertising)
நிறுவனங்களிலே உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் மற்றும் சேவைகளை மக்களுக்கு காட்சிப்படுத்தும் இணையத்தளங்கள் காணப்படுகின்றன.
உதாரணம் ! WWWWWW', onclickads.net,
WWWWWW.adcash.com, www.Immyadvertisingpay's.com
5) செய்திகளை வழங்கல் (News)
பல்லூடகத் தொழினுட்பத்துடன் கூடிய செய்திகளை வேகமாக மக்களுக்கு காட்சிப்படுத்தும் இணையத்தளங்கள் காணப்படுகின்றன.
உதாரணம் : www.itnniews.lk, www.newsfirst.lk,
www.bbc.co.uk
6) சமூக தொடர்புகளை கட்டியெழுப்பும் ஊடகங்கள் (Social Media)
கல்விமட்டம், தொழில்சார், விருப்பு மற்றும் வேறு நோக்கங்களுக்காக வேறு பட்ட சமூக குழுக்களிடையே தொடர்பை உருவாக்கல் மற்றும் அதனை தொடர்தல் போன்ற வசதிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள் காணப் படுகின்றன.
7) தேடல் (Search)
சொல்லொன்றை அல்லது வாக்கியமொன்றை சாவியாகக் கொண்டு, உலகளாவிய வலையிலே எமது தேவைக்குப் பொருத்தமான கட்புல, செவிப்புல தகவல்களை தேடுவதற்குரிய வசதியைக் கொண்ட இணையத்தளங்கள் ஆகும். இவை தேடல் பொறி (Search Engine) என அழைக்கப்படுகிறது.
உதாரணம் : WWW.google.com,
www.msn.com, Www.bing.com
8) தனிநபர் நோக்கம் (Personnel)
எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் போன்ற பிரசித்தி பெற்ற நபர்கள் அல்லது குழுக்கள் தமது தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கு இவ்வாறான இணையத்தளங்கள் உதவுகின்றன.
No comments:
Post a Comment